நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் அறிவியல் வகுப்பிற்குரிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டியும் அதற்குரிய விவசாய நிலங்களை பயன்பாட்டில் கொண்டு வர வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணைச் செயலாளர் வேணு.பாஸ்கரன் இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை வழங்கி அத்துடன் நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிகவும் பழமைவான பள்ளி அந்த பள்ளியில் வேளாண் அறிவியல் என்ற பிரிவை சேர்ந்த வகுப்பு நடைமுறையில் இருந்து வந்தது அதில் மாணவர்களும் பயின்று வந்தனர்.
இந்த சிறப்பு வாய்ந்த வகுப்பினை சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, தற்போது இந்த கல்வி ஆண்டு முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து நடத்தி வருகின்றனர்.
இருந்த போதிலும் மாணவர்கள் மத்தியில் பயிற்சி அளிப்பது மிகவும் மோசமான கல்வித்தரத்தை கொண்டுள்ளது, இதனால் மேல் வகுப்பை தொடரவும் புதியதாக இணைய உள்ள மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது, எனவே இப்ப பள்ளிக்கு அப்பாட பிரிவை சேர்ந்த உரிய ஆசிரியர்களே அரசே நேரடியாக நியமனம் செய்ய வேண்டும் .மேலும் இந்த பள்ளிக்கு மேற்படி வகுப்பிற்காக நன்னிலம் பகுதியில் உள்ள விவசாய நிலம் 4 ஏக்கர் உள்ளது
அதில் ஒரு மின்மோட்டார் மின் இணைப்பு உடல் உள்ளது இந்த விவசாய நிலங்களை பயன்பாடற்று கருவேல மரங்கள் வளர்ந்து உள்ளதால், அதையும் சில சமூக விரோதிகள் அபகரிக்க முயற்சிக்கின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு விவசாய நிலங்களை மீண்டும் மீட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் மேலும் இத்தகைய பாடத்திட்டம் வாயிலாக இப்பகுதி மாணவர்களின் மூலம் விவசாயத்தை தங்கள் மூலம் ஊக்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த மனுவினை கொடுத்தார்.
அதனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பெற்று கொண்டு விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இன்று மனு வழங்கும் போது தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணைத் தலைவர் பழனி, மாவட்டத் துணைச் செயலாளர் கணேச. சண்முகம், பாமக குடவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜுவ் ஆகியோர் உடனிருந்தனர்.