தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு திருவாரூர் மாவட்டம் சார்பாக உலக எய்ட்ஸ் தினம் 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா, நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், துணை இயக்குனர் புகழ், மாவட்ட மேற்பார்வையாளர் ராமஜெயம், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.