பெஞ்சால் தமிழகத்தில் புயலால் பாதிக்கப் பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
அதேபோன்று மதுரை மாநகராட்சியில் இருந்து விழுப்புரம் மாநகராட்சிக்கு வெள்ள நிவாரண பொருட்கள் மதுரையில் இருந்து டிப்பர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
லாரியை பல்கலை நகர் ஆலம்பட் டியை சேர்ந்த கற்பகராஜா (33) ஓட்டிச் சென்றார். அவருடன் விளாச்சேரி ஆதி சிவன் நகரைச் சேர்ந்த மாநகராட்சி என்ஜினீயர் ரமேஷ்பாபுவும் சென்றார்.
அந்த டிப்பர் லாரி துவரங்குறிச்சி ஐயப்பன்கோவில் அருகேசென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதி நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் என்ஜினீயர் ரமேஷ்பாபு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் கற்பக ராஜா படுகாயமடைந்தார். அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.