ஆசிய அளவில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் தங்கம் பெல்ட் வென்ற வடசென்னை வீரர் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் குத்துசண்டை வீரராக இருந்து வருகிறார்.
இவர் வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் உள்ள எம்கேபி நகர் காவல் துறை போலீஸ் பாயஸ் கிளப்பில் குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.
தேசிய அளவலான பல போட்டிகளில் பங்கேற்றவர் தற்போது முதன் முறையாக பங்களாதேஷில் நடைபெற்ற ஆசிய அளவிலான சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.
ஆசிய அளவிலான உலக குத்துச்சண்டை கவுன்சில் நடத்திய சர்வதேச தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் WBC CONTINENTAL FLY WEIGHT (ப்ளை வெயிட்)என்ற பிரிவில் பங்கேற்ற சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அந்த போட்டியில் வெற்றி பெற்று தங்க பெல்ட்டை கைப்பற்றியுள்ளார்.
கடந்த 29 ஆம் தேதி பங்களாதேஷில் நடைபெற்ற இறுதி போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பங்களாதேஷை சேர்ந்த எம்டி.சபியுல் இஸ்லாம் என்பவரை 8 சுற்று ஆட்டத்தில் மூன்று நடுவர்களின் முன்னிலையில் 79-71, 76-70, 76-70 புள்ளிகளின் அடிப்படையில் 3 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் அவரை வீழ்த்தி தங்க பெல்ட்டை கைப்பற்றினார்.
பங்களாதேஷில் இருந்து டெல்லி வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் மாலை அணிவித்து சால்வைகள் அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனை அடுத்து ராமகிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது குத்துச்சண்டை பயிற்சி பெறுவதற்காக மைதானங்கள் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார் மேலும் தமிழக முதல்வரையும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்துகிறேன் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.