தென்காசியில்மேய்ப்பனின் குரல் சீசன் – 4 கிறிஸ்துமஸ் பாடல் போட்டி நடைப்பெற்றது ;-

தென்காசியில் மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தில் மறைவட்ட அளவிளான மேய்பனின் குரல் சீசன் – 4 கிறிஸ்துமஸ் பாடல் போட்டியினை பாளையங்கோட்டை மறைமாவட்டம் சார்பில் கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவின் செயலர் தந்தை அருட்பணி மரியசுதன் அடிகளாரின் மேற்பார்வையில் நடைபெற்றது,.

இந்நிகழ்வில் தென்காசி மறைவட்டத்தில் உள்ள 14 பங்குகளில் இருந்து தென்காசி,செங்கோல் நகர், சுந்தர பாண்டியபுரம், கடையம், சுரண்டை, வெய்காலிப்பட்டி, பாவூர்சத்திரம், அகரக்கட்டு, வல்லம், கொட்டா குளம், மேலமெஞ்ஞானபுரம் ஆகிய பங்கு & கிளை பங்கு சார்பில் பதினோரு அணிகள் பங்கேற்றனர்.

இந்நி கழ்ச்சியினை வேதியர் விக்டோரியா தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் பாடல் குழுவினர்
தனித்தனி குழுவாக கிறிஸ்துமஸ் பாடல் பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இவர்களின் பாடல்களை மதிப்பீடு செய்வதற்கு இசை ஆசிரியர் திரவியம், இசை ஆசிரியை அனு, அருட்சகோதரர் சுனில் பெஞ்சமின் ஆகியோர் நடுவர்களாக இருந்து 11 அணிகளில் இருந்து சிறப்பாக பாடல் பாடிய மூன்று அணிகள் தேர்வு செய்தனர். முதல் இடம் வல்லம் அணி, இரண்டாம் இடம் சுந்தரபாண்டியபுரம் அணி, மூன்றாம் இடம் பாவூர்சத்திரம் அணி இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அணிகள் வருகின்ற டிசம்பர் 8ம் தேதி பாளையங்கோட்டையில் நடைபெறும் இறுதி சுற்றில் பங்கேற்க வேண்டும்.

இந்த பாடல் போட்டியில் . பங்கேற்ற அனைத்து அணியினருக்கு நினைவு பரிசினை தென்காசி
மறைவட்ட அதிபரும் பங்குத்தந்தையுமான முனைவர் போஸ்கோ குணசீலன் அடிகளார் வழங்கினார். இந்நிகழ்வில் வல்லம் பங்குத் தந்தை விசுவாச ஆரோக்கியராஜ், வெய்க்காலிப்பட்டி பங்குத் தந்தை வர்கீஸ், தென்காசி உதவிப் பங்குத் தந்தை மிக்கேல் மகேஷ், கடையம் பங்கின் திருத்தொண்டர் மற்றும் திரளான இறை மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *