திருவாரூர்,டிசம்பர்.2-திருவாரூர் மாவட்டம்,குடவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பிடாரிகோவில் தெருவில் முத்துசாமி நகர் என்ற பெயரில் 20000-சதுரடி மனையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்வதாகவும்.
மேற்கொண்ட இடத்தை குடவாசல் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலராக பணியில் இருந்த செயல் அலுவலர் பரமேஸ்வரி எந்தவித அடிப்படை வசதியும் மேற்கொள்ளாமல் எந்தவித ஆவணமும் இன்றி மனையை விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து குடவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் திமுக கட்சியை சார்ந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் திங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
