அய்யூர் கிராமத்தில் ஸ்ரீ மதுரைவீரன், நொண்டிசாமி, திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர், வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரைவீரன், நொண்டிச்சாமி, ஆண்டிச்சாமி, பட்டவர்சாமி, நைனார்சாமி, அக்காயி அம்மன் திருக்கோவில் 48ஆம் நாள் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது.
யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க பல்வேறு சிறப்பு யாக வேள்விகள், ஹோமங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் சுவாமி சிலைகள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல அபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு, நைனப்பன் அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.