திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுதானிய உணவின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த விழிப்புணர்வு பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் துவக்கி வைத்தார்,
சிறுதானியங்களான கேழ்வரகு, சோளம், திணை, வரகு போன்ற தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வோம் என்ற மக்கள் விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், முதுகலை ஆசிரியை நிர்மலா ஜோதி, உடற் கல்வி இயக்குனர் ராம்பிகா, ஆசிரியர் அன்பு, சத்துணவு அமைப்பாளர் கீதா, உதவியாளர் எல்லையம்மாள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.