கோவையில் நடைபெற உள்ள மேக்ஸ்வெல் ஸ்டார்ஸ் நைட் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகளை தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி அறிமுகம் செய்து வைத்தார்…
கோவையில் சன் ஸ்மார்ட் மீடியா குழுமம் மற்றும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை ஆகியோர் இணைந்து மேக்ஸ்வெல் ஸ்டார்ஸ் நைட் எனும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பர் 22 ந்தேதி நடைபெற உள்ளது..
மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட உள்ள மகிழம் எனும் ஆதரவற்றோர் இல்ல கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ள இதில் பிரபல நடிகர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் என பலர் பங்கு பெற உள்ளனர்.
இந்நிலையில் இதற்கான அனுமதி சீட்டுகள் அறிமுக விழா கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சன் ஸ்மார்ட் மீடியா குழும அலுவலகத்தில் நடைபெற்றது..
சன் ஸ்மார்ட் மீடியா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில்,சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மேக்ஸ்வெல் அறக்கட்டளை நிறுவனர் முருகன்,நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தின் நிறுவனர் அப்துல் மஜீத்,ஆஸ்கர் புராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் முருகேஷ்,
ஜீவசாந்தி அறக்கட்டளை சலீம்,பசியில்லா கோவை அறக்கட்டளை செய்யது,சன் ஸ்மார்ட் மீடியா குழுமங்களின் துணை தலைவர் சாகுல் ஹமீத்,கோவை தல்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்..