கம்பம் விஜயா பல் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பல் சிகிச்சை முகாம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் செயல்பட்டு வரும் கம்பம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களின் மிகுந்த நன் மதிப்பை பெற்று பொதுமக்களின் பேராதாரவில் இயங்கி வரும் கம்பம் நகரில் பிரபல பல் மருத்துவமனையான விஜயா மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச பல் சிகிச்சை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த முகாமிற்கு பள்ளியின் இயக்குனர் ஜெகதீஷ் அவர்கள் தலைமை ஆகினார் பள்ளி தாளாளர் கீதா ஜெகதீஸ் முன்னிலை வகித்தார் விஜயா பல் மருத்துவமனையின் பிரபலமான மருத்துவர்கள் சுசி விஜயராஜ் மற்றும் டாக்டர் நந்தினி சுசி விஜயராஜ் ஆகியோர் பள்ளியில் உள்ள 1500 மாணவர்களுக்கு பல் சிகிச்சை செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் மட்டுமில்லாமல் பல் பராமரிப்பு எவ்வாறு பல்லை பராமரிக்க வேண்டும் நமது உடல் உறுப்புகளில் முக்கிய அங்கமாக உள்ள பல்லை பராமரிக்க வேண்டிய ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கி மாணவர்களுக்கு பல் சிகிச்சை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
இந்த முகாமில் இந்த முகாமில் எஸ் பி எம் ஜெய் டெக் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு அடைந்தனர். முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் விஜய் பல் மருத்துவமனை டாக்டர்கள் சுசி விஜயராஜ் மற்றும் டாக்டர் நந்தினி ஆகியோர் மாணவர்களை கனிவுடன் உபசரித்து அவர்களுக்கு தேவையான பல் சிகிச்சை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி முகாமில் சிறப்பு செய்தனர்.