தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், டிச- 06. தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் பனகல் கட்டிடம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூரில் இயங்கி வரும் தென்னகப் பண்பாட்டு மையத்தில் நாட்டுப்புற கலைஞர்களை அவமதித்து, அவர்களுக்கு வாய்ப்புகளை மறுத்து வரும் தென்னகப் பண்பாட்டு இயக்குனர் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மக்கள் கலை இலக்கிய கழகம், மாற்று ஊடகம் மையம், நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வாதார கூட்டமைப்பு, நஞ்சை லாவணி கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் நா.சாம்பான் தலைமை வகித்தார். சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரும் மாற்று ஊடக மையத்தின் தலைவருமான இரா.காளீஸ்வரன் கண்டன ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்து உரையாற்றினார். மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்களை அவமதிக்கும் தென்னக பண்பாட்டு மைய அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நாட்டுப் புற கலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிசெலவுகளில் நடந்துள்ள நிதி முறைகேடுகளை சிறப்பு குழு அமைத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னக பண்பாட்டு மையத்தில் செவ்வியல் கலைகளுக்கு தரும் முக்கியத்துவத்திற்கு இணையாக கிராமிய கலைகளுக்கும் வழங்க வேண்டும், பணிஓய்வுபெற்ற ஊழியர்களை பயன்படுத்துவதை நிறுத்தி, காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கையூட்டு பெற்று கலைநிகழ்ச்சி நடத்தும் முறையை கைவிட வேண்டும். கலைகளுக்கு தொடர்பில்லாத நபர்களை வெளியேற்றி, இடைத்தரகர் முறையை கைவிடவேண்டும், கலை நிகழ்ச்சி வாய்ப்புகளை அனைத்து கலைஞர்களுக்கும் முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட கலைக் குழுக்களுக்கு சுழற்சி முறையில் நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும்,
கிராமிய கலைஞர்களுக்கான ஊதிய உயர்வை உயர்த்தி வழங்க வேண்டும். செவ்வியல் கலைஞர்களுக்கு நிகரான ஊதியம் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தரவேண்டும், கிராமிய கலைகள் பாதுகாக்கவும், வளர்க்கவும் ஆலோசனை குழு அமைத்து, விருதுகள் பெற்ற மூத்த கிராமிய கலைஞர்களையும் உறுப்பினர்களாக்கி ஆலோசனை பெறவேண்டும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆலோசனை கூட்டம் முறையாக நடத்த வேண்டும், அழியும் நிலையில் உள்ள கிராமியக் கலைகளை ஏற்கனவே அமல் படுத்தப்பட்ட குரு - சிஷ்ய பயிற்சி திட்டத்தின்கீழ் மூத்த, பயிற்பெற்ற கலைஞர்களைக் கொண்டு பயிற்சி அளித்து மீட்டுருவாக்கம் செய்யவேண்டும், வெளியூர், வெளிமாநில நிகழ்ச்சிகளுக்கு செல்லும் கலைஞர்களுக்கு கொடுத்துவந்து நிறுத்தப்பட்ட பயணச் செலவு,முன்பணம் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு நிகழ்ச்சிகளுக்கு ரூ 2000/= வெளிமாநிலங்களுக்கு ரூ5000/=வழங்க வேண்டும்,நிகழ்ச்சி முடிந்ததவுடன் காலம் தாழ்த்தாமல் ஊதியத்தை உடனே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெளியூர், வெளி மாநிலம் செல்லும் கலைக்குழுவோடு தென்னகப் பண்பாட்டு மைய ஊழியர் ஒருவரை உடன் அனுப்பி வழிகாட்டுவதை தொடரவேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழக இணை பொதுச் செயலாளர் இராவணன், இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், அனைத்து கலைஞர்கள் நல வாழ்வு சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், மாற்று ஊடக மைய கொள்கை கோட்பாடு செயலாளர் தங்கவேல், பல்வேறு இயக்க நிர்வாகிகள் தேவா,லட்சுமணன், முருகானந்தம், சரவணன் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் ஜெய்சங்கர், ராஜேஷ், முருகேசன், டேவிட், கலைமணி, சத்தியபாலன், ஜெயபால், பிச்சை பிள்ளை, திருமாவளவன், அருள், சுதாகர்,பார்வதி, இலக்கியா, குமாரப்பா, நதியா, முத்தமிழ் செல்வன், அருள்தாஸ், சத்தியசீலன் உள்ளிட்டார் பங்கேற்றனர்.