கும்பகோணத்தில் அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழலை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க உத்தரவு விட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு அதான் நீ குடும்ப நிறுவனங்களில் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஆண்டு கணக்கில் நீடித்து வரும் மணிப்பூர் கலவர சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி வழங்கிட வேண்டியும்
உணவு தானியங்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதையும் , பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க தவறிய பாஜக ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் சிபிஐ மாவட்ட செயலாளர் மு.அ. பாரதி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவ புண்ணியம், ஏஐடியுசி மாநில செயலாளர் திலலைவனம் , செந்தில்குமார் , ராஜேந்திரன், சாமு. தர்மராஜன், ஒன்றிய செயலாளர் பாலா மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.