திண்டுக்கல் மாவட்டம் கோட்டா நத்தம், வசந்தகதிர் பாளையம் பகுதியைச் சேர்ந்த உயரம் குறைந்த மாற்றுத்திறனாளி பெரியசாமி என்பவர் இந்த மனு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்
அதில் நான் பிறவியிலேயே குள்ளமான மாற்றுத்திறனாளி. நான் பெட்டிக்கடை வைத்து வாழ்வாதாரத்தை நிர்வகித்து வருகிறேன். எங்கள் வசந்த கதிர் பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். கட்டிடத் தொழில், விவசாயக் கூலி உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் பகுதிக்கு நாடக மேடை, சமுதாய மண்டபம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்ககேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.