கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கெஜமுடி எஸ்டேட் எல்.டி.டிவிசன் 12 மற்றும் 12 குடியிருப்பு பகுதிகளில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் நுழைந்த காட்டு யானைகள் குடியிருப்பு அருகே உள்ள செப்டிக் டேங்கில் விழுந்து சத்தம் கேட்டு எழுந்த சரோஜினி வயது 52 என்பவர் தனது வீட்டின் கதவை திறந்து வெளியில் வரும்போது காட்டுயானை தாக்கி கீழே விழுந்து கணுக்காலில் எழும்பு முறிவு மற்றும் முகத்தில் சிராய்ப்பு காயங்களும் ஏற்கப்பட்டுள்ளது இந்நிலையில் அங்கு கூடியிருந்த எஸ்டேட் தொழிலாளர்கள் மிரண்டு ஓடியதில் தவறிவிழுந்த உதயகுமார் வயது 32 என்பவருக்கு தோள்பட்டையில் மூட்டு விலகிய நிலையில் காயம் ஏற்பட்டும், சந்திரன் வயது 62, என்பவருக்கு வலது கையில் எழும்பு முறிவு மற்றும் இரண்டு கால்களின் முழங்கால்களில் சிராய்ப்பு காயங்களும், கார்த்தீஸ்வரி வயது 40 என்பவருக்கு வலது முட்டியில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது காயமடைந்த நால்வரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேலும் சம்பவப் பகுதியில் மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்ற மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் பின்பு காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிகளில் வரும்போது இரவு நேரங்களில் தொழிலாளர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்