கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை 13.12.2024 பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பை மாவட்ட ஆட்சி தலைவர் ஆர் வி ஷஜீவனா அறிவித்துள்ளார் கார்த்திகை தீபத்திருநாளான இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் 13.12.2024 கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது இதன்படி வெள்ளிக்கிழமை இன்று காலை முதலே பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது இதை யடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா விடுத்துள்ள அறிக்கையில் கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் செயல்படும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்