மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நீலகிரி மாவட்டம் சார்பாக சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா 2024 இன்று கொண்டாடப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட சிறுபான்மை அலுவலர், உதகமண்டலம் கோட்டாட்சியர், மாவட்ட அரசு காஜி, ஐக்கிய ஜமாஅத்-குன்னூர் தலைவர் தலைவர் ஜம் ஜம் முபாரக் அலி, செயலாளர் டாக்டர். முகமது சலீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்