D பண்டரிநாதன் (எ) அண்ணாதுரை துணை ஆசிரியர்
புதுச்சேரி
புதுச்சேரி
நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்ட சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை உச்சரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சனாதன வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்ணல் அம்பேத்காரை இழிவுப்படுத்திய அமித்ஷா வின் ஆவணப் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழந்து வருகிறது.
சாதிய அமைப்பையும், மதவெறி அரசியலையும் வளர்த்து வெறுப்பு அரசியலை முன்னெடுத்து செல்வதை பிஜேபி ஒருபோதும் கைவிடாது என்பதையே அமித்ஷா வின் சனாதன வெறி பேச்சு அம்பலபடுத்துகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி தந்த ஈடு இணையற்ற சட்டமேதை அம்பேத்கர் அவர்களை இழிவு ப் படுத்திய அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பில் நீடிக்கக்கூடாது அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலம் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, அமுதா மாநில குழு உறுப்பினர்கள் அபிஷேகம், ராமமூர்த்தி, தேவ சகாயம் மூர்த்தி, முருகன், எழிலன், முரளி, செல்வம், தொகுதி செயலாளர்கள் துரை செல்வம், ரவிச்சந்திரன், கண்ணன், ஆறுமுகம், பெருமாள், கண்ணாடி பட்டு பெருமாள், சுகதேவ், பெஞ்சமின், பெருமாள், ஜீவானந்தம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.