தந்தைபிரியன் இணை ஆசிரியர்
புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி எஸ்சி எஸ்டி பிரிவு மற்றும் தலித் கூட்டமைப்பு சார்பில் உலக நாடுகள் போற்றும் உத்தமத் தலைவர் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இதில் மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ஜெயபாலன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள், மகளிரணி பொறுப்பாளர்கள், இளைஞர் அணி பொறுப்பாளர்கள்,கலந்து கொண்டு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசுக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து முன்னாள் சமூக நலத்துறை மற்றும் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கந்தசாமி அவர்கள் கண்டன உரையாற்றினார்