C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் டவுன்ஹாலிருந்து அண்ணா பாலம் வரை கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
நுகர்வோர்கள் தரமான பொருட்களை விளம்பரத்திற்காக இல்லாமல் சரியான பொருட்களை தேவையான அளவு வாங்கி பயன்படுத்திட வேண்டும் என்பதற்காக நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் டவுன்ஹாலிருந்தும், சிதம்பரம் வருவாய் கோட்டத்தில் பேருந்து நிலையத்திலிருந்தும், விருத்தாசலம் வருவாய் கோட்டத்தில் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியிலும் என மூன்று இடங்களில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விழிப்புணர்வு பேரணயில் விழிப்புடன் இருப்போம். உரிமைகளை காப்போம். உங்கள் உரிமை. உங்கள் குரல். உங்கள் உரிமையைத் தெரிந்து கொள்ளுங்கள். மாற்றமாகுங்கள். உங்கள் உரிமை, உங்கள் எதிர்காலம். நுகர்வில் நுன்மை, நாளும் தேவை. நுகர்வோர் உரிமை பகிர்ந்தளிக்கப்பட்ட பொறுப்பு. அறிந்து தெளிந்து உணர்ந்து நுகர்க. நுகர்வு குறை, விழிப்புணர்வே நிறை. வளமான எதிர்காலத்திற்கு, பொறுப்பான நுகர்வு. பொறுப்புடன் நுகர்வோம். நீடித்து வாழ்வோம். இப்போதைய நகர்வு, பொறுப்பான நுகர்வு. விளம்பரத்திற்கு மயங்காதே, விழிப்புணர்வை இழக்காதே. நுகர்வைக் குறைப்போம். விழிப்புணர்வை பெருக்குவோம். நுகர்வை குறைப்போம். மாற்றுவோம். மாற்றுவோம். மாற்றுவோம். விழிப்பான நுகர்வோராக மாற்றுவோம். உனக்கான உரிமையை நிலைநாட்ட அணுகுவீர் குறைதீர் ஆணையத்தை. நுகர்வோர் உரிமையை அறிந்திடுவோம். அடிப்படை தேவைகளுக்கான உரிமையை பற்றி அறிவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.