மாதவரத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமடைந்து கொண்டாட்டம்.
செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் பஜார் அருகில் உள்ள
அருள் சி எஸ் ஐ கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குழந்தைகள் முதல் பெரியோர் வரை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வீதி வீதியாக உலா வந்தனர்.
இந்நிகழ்வில் மாதவரம் பஜார் ரோடு, உடையார் தோட்டம் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் விதி வீதியாக சிறுவர் முதல் பெரியோர் வரை சுமார் 500 க்கும் மேற்பட்டோர் ஆண்கள், பெண்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பக்தி பாடல்களைப் பாடி அனைவரையும் கவர்ந்தது.
மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பிகளை அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடம் வழங்கி அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர் . இதனை ஆலய நிர்வாகிகள் சிறப்புடன் நடத்தினார்கள்