கூடலூர் நகராட்சியில் 1.68 கோடி மதிப்பீட்டில் மேல்நிலைத் தொட்டி கட்ட பூமி பூஜை நகர்மன்றத் தலைவர் தலைமையில் நடந்தது தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய நகரமாகும் இந்த நகரில் லோயர் கேம்ப் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கூடலூர் நகராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது மக்கள் தொகை பெருக்கத்தாலும் நகர விரிவாக்கம் போன்றவைகளால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் கூடுதலாக மேல்நிலைத் தொட்டி கட்ட வேண்டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதன் அடிப்படையில் 17 ஆவது வார்டு ராஜீவ் காந்தி நகர் கரிமேட்டுப்பட்டியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடி நீர் மேல் தொட்டி கட்ட நகராட்சி நகர் மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது
கம்பம் எம்எல்ஏ என். ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி எம்எல்ஏ ஆ. மகாராஜன் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் நகராட்சி பொறியாளர் பன்னீர் புண்ணியமூர்த்தி திமுக நகரச் செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான லோகந்துரை உள்பட நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் நகராட்சி இளநிலை உதவியாளர் கோபி நன்றி கூறினார்