தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு விவசாய தின வாழ்த்துக்கள் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்தவர் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவனத் தலைவர் பண்பாளர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு விவசாயம் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் மேலும் கூறியது எனது வாழ்க்கை பயணத்தின் முன்னோடி எனது வாழ்க்கையின் வழிகாட்டி எனது அப்பா அழகர்சாமி செட்டியார் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன் மேலும் நமது இந்திய திருநாடு விவசாய நாடு விவசாயத்தில் பல்வேறு உணவு தானியங்கள் உற்பத்தி செய்து நம் இந்திய திருநாட்டுக்கு மட்டும் இல்லாமல் வெளிநாடுகளுக்கும் விவசாய விளைப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஒரே திரு நாடு இந்திய திருநாடு என்பதில் பெருமை கொள்வோம் ஆண்டுதோறும் டிசம்பர் 23ஆம் தேதியை விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த நாளில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக விவசாயம் செய்யும் அனைத்து விவசாய பெருங்குடி மக்களுக்கும் எனது இதயம் கனிந்த விவசாய தின நல்வாழ்த்துக்களை கூறி நமது இந்திய திருநாடு பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அதற்கு விவசாயம் செழித்தால் மட்டுமே முடியும் எனவே விவசாயம் பார்க்கும் விவசாயிகள் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் விவசாயி தினமான டிசம்பர் 23ம் தேதி இன்று கூறுவதில் பெருமை கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார் .