திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேல விடையல் ஊராட்சி ஆண்டாங் கோவில் அருகே உள்ள சாந்தவெளி பகுதியில் ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் அருகே ஆல மரங்கள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது ஆஞ்சநேயர் ஆலயம் அருகே உள்ள ஆலமரம் திடீரென மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு ஏற்பட்டது.