தேனி மாவட்டத்திற்கு மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வந்த தேனி எம்பிக்கு பொதுமக்கள் பாராட்டு தேனி மாவட்டத்திற்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளி என்பது இல்லை
தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் முடிந்த பிறகும் இதுவரை இருந்த முன்னாள் எம்பிக்கள் யாரும் இதுவரை கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை தொகுதி மறு சீரமைப்பபுக்கு பிறகு தேனி பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டு எத்தனையோ எம்பிக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றம் சென்றவர்கள் யாரும் எடுக்காத நடவடிக்கையை தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பாராளுமன்றத்தில் பேசியும் இது சம்பந்தப்பட்ட மத்திய கல்வித் துறை அதிகாரிகளை சந்தித்து பேசி தேனி மாவட்டத்திற்கு கேந்திர வித்யாலயா பள்ளி கொண்டு வந்து விரைவில் பள்ளி துவங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசின் கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறும்போது விரைவில் தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்படும் மேலும் தமிழக முதல்வரின் மெகா திட்டமான பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் 1000 கலைஞர் மகளிர் உதவித்தொகை அனைத்து ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும் அதற்கான நடவடிக்கைகளை இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள் வரும் 2025 புத்தாண்டில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் இவ்வாறு எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்
உடன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுப் பிரியா பாலமுருகன் முன்னாள் நகர செயலாளர் பாலமுருகன் நகரச் செயலாளர் நாராயண பாண்டியன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல ர் உடன் இருந்தனர்