வாடிப்பட்டி
தமிழகத்தில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் ஒன்பது பேர் கொண்ட புதிதாக கிளைக் கழகம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மேற்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் வாடிப்பட்டியில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்சி வேட்டி வழங்கப்பட்டது.
இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் மணிமாறன், கலந்து கொண்டு தீர்மான நகலை வாசித்தார். இந்த கூட்டத்திற்கு மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், வக்கீல் திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் வக்கீல் லெட்சுமி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜெயச்சந்திரமணியன், சென்னை தொழிலதிபர் விருகை தர்மர், கச்சைகட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆலயமணி, விவசாய அணி வாவிடமருதூர் ஆர்.பி.குமார், நகர பிரதிநிதி கேட்டுகடை முரளி, மற்றும் மூர்த்தி,உட்பட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் கோட்டைமேடு பாலன், நன்றி கூறினார்.