விருத்தாசலத்தில் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு கருணையின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் விழா விமர்சையாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில எம் ஆர் கே நகர் பகுதியில் அமைந்துள்ள கருணையின் கரங்கள் அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கருணையின் கரங்கள் அறக்கட்டளை இயக்குனர் கரோலியிலன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் கருணையின் கரங்கள் அறக்கட்டளை ஆசிரியர் அற்புதராஜ் அனைவரையும் ஒருங்கிணைந்து வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அன்னை பாத்திமா ஆலயத்தின் அருள்தந்தை மரிய ஆண்டோனி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இயேசுவின் பிறப்பை பற்றி ஜெபம் செய்து கேக் வெட்டி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஜூலியஸ் மேரி அனைவருக்கும் நன்றி கூறினார்.