வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் ஜி 43-வது நினைவு தினம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற் சங்கம் சார்பாக முன்னாள் ஊள் துறை அமைச்சரும், எளிமையின் உருவமான கக்கன் ஜி அவர்களின் 43-வது நினைவு தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கக்கன் ஜி யின் திருவுருவ படத்தை அலங்கரிக்கப்பட்டு வைத்து, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கம் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் கக்கன்ஜியின் எளிமையைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும், தூய்மையான அரசியல் பற்றியும் பேசினார். நிகழ்ச்சியில் வலங்கைமான் ஊரக கூட்டுறவு வங்கியின் முன்னாள் ஊழியர் மேல பூண்டி பாஸ்கர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.