பாலமேடு அருகே வனத்துறை சாலைகளை சீரமைக்க இரண்டாம் கட்ட ஆய்வு சோழவந்த சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலையில் நடந்தது

அலங்காநல்லூர்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளதுசாத்தியார் அணை .இதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.வகுத்து மலை, கல்லுமலை அடிவாரத்தில், வைகாசிபட்டி, கோவில்பட்டி, தெத்தூர். மேட்டுப்பட்டி. கொழிஞ்சிபட்டி,போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் செல்கிறது.


இந்தப்பகுதிகிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் அனைத்தும் முற்றிலும் சிதிலமடைந்து போக்குவரத்திற்கு பயன்பாடு அற்ற நிலையில் இருந்தது.முதல் கட்டமாக சாத்தியார் அணை முதல் தெத்தூர், கெங்கமுத்தூர் வரை 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து சிதிலமடைந்தசாலை
தார் சாலையாக சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சாத்தியார் அணை பிரிவு முதல் வைகாசிபட்டி,கோவில்பட்டி செல்லக்கூடிய சாலை 900 மீட்டர் நீளம் ஆறு மீட்டர் அகலத்தில வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் சாலை அமைக்கும் பணிக்காக இரண்டாவது கட்டமாக அளவீடு செய்யப்பட்டது.

வனத்துறை அனுமதி கிடைக்காத காரணத்தினால் பல ஆண்டுகளாக இந்த சாலை அனைத்தும் சீரமைப்பு செய்து செப்பனிடப்படாமல் இருந்தது. இதன் காரணமாகஇந்த பகுதிகிராம மக்கள் சென்று வரபோதிய சாலைவசதி இல்லை. பல வருடங்களாக
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலையாக மாற்ற வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை மனு
கொடுத்து இருந்தனர்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் வனத்துறை ,ஊரக வளர்ச்சி துறை, அதிகாரிகள் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முயற்சியால் தெத்தூர் கொழிஞ்சிபட்டி
கெங்கமுத்தூர் செல்லக்கூடிய 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வனத்துறை அனுமதியோடு சீரமைக்கப்பட்டு தார்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இதே போல் மீதமுள்ள வைகாசிபட்டி கோவில்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய வனத்துறை சாலை சாத்தியார் அணையை சுற்றியுள்ள வனத்துறை சார்ந்த
மலை அடிவார சாலைகள் அனைத்தையும் நேற்று திங்கள்கிழமை காலை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் வனத்துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை உள்ளாட்சி துறை அதிகாரிகள்இரண்டாம் கட்ட சாலை அமைக்கும் பணிக்காகஅளவீடு செய்தனர். அதன்படி வைகாசிபட்டி கிராமத்திற்கு செல்லக்கூடிய 900 மீட்டர் நீளம்மற்றும் 6 மீட்டர் அகல மலைப்பகுதி சாலைகள் அனைத்திலும் நீள அகலம்அளவீடுஅத்துமால் செய்தனர் .
இதுகுறித்துசோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கூறியதாவது.

இந்த அளவீடுதொடர்பான அறிக்கை மாவட்ட நிர்வாகத்திற்கும்,
தமிழ்நாடு அரசுக்கும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து இன்னும் ஒரு சில வாரங்களில் இதற்கான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்.பிரசித்தி பெற்ற கல்லுமலைகந்தன் சுவாமி கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் மற்றும் வைகாசி பட்டி ,கோவில்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு இந்த சாலை பயனுள்ளதாக அமையும். இதேபோல் சரந்தாங்கி, முடுவார்பட்டி சால்வார்பட்டி மலை சாலைகளும் , வனத்துறையின் அனுமதியின் பேரில் பணிகள் நடைபெறும் ‘இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அளவீட்டுப் பணி நிகழ்வின் போதுமாவட்ட வன அலுவலர் தருண்குமார்,செயற்பொறியாளர் இந்துமதி ,நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கௌதம்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
வள்ளி,கலைச்செல்வி,உதவி செயற்பொறியாளர் விக்னேஷ்,
திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பேரூராட்சி தலைவர்கள் பாலமேடு சுமதி பாண்டியராஜன், அலங்காநல்லூர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ் , பொதுக்குழு உறுப்பினர் முத்தையன். ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார் பேரூராட்சி துணைத் தலைவர் சாமிநாதன், யூனியன் துணைத் தலைவர் சங்கீதாமணிமாறன்,சாத்தியார் அணை பாசன விவசாய சங்க நிர்வாகி நடராஜன்,ஊராட்சி மன்ற தலைவர்கள்
காயத்ரிஇதயசந்திரன்,ஈஸ்வரிசீனிவாசன்,நித்யாபழனிநாதன், ஜெயமணிஅசோகன், சத்யாசெந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனுஷ்கோடி,ஒப்பந்ததாரர் துரைக்கண்ணு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, தகவல் தொழில்நுட்ப அணி தண்டலை தவசதீஷ், அய்யூர்ரியாஸ்கான், பொறியாளரணி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *