அறிஞர் அண்ணா கல்லூரியின் கணிதவியல் துறையில் கணித மேதை இராமானுஜர் பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா (கலை மற்றும் அறிவியல்) கல்லூரியின் கணிதவியல் துறையில் கணித மேதை இராமானுஜர் பிறந்தநாள் விழா.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறையின் சார்பில் கணிதமேதை இராமானுஜர் 138 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் கணிதவியல் துறை தலைவர் திரு.P. செந்தில் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில்,1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதை குறிப்பிட்டுப் பேசினார். இராமானுஜர் பிறந்தநாள் விழாவில் கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியர்
திரு C.அண்ணாமலை, திரு J பிரகாசம் , திரு J.செந்தில், திரு G.திருப்பதி, M.கணேஷ் குமார், முனைவர் B.மோகன் உதவிப் பேராசிரியைகளான திருமதி S. பிரபா,
திருமதிM. டெய்சி, திருமதி S.யோக வள்ளி மற்றும் அனைத்து துறைத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கணிதத்துறை துறை மாணவ, மாணவியர் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிறந்தநாள் விழாவின் நிறைவாக திரு A .அருள் ஸ்டாலின் நன்றி கூற ,விழா இனிதே நிறைவு பெற்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *