தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆர்வி ஷஜீவனா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 232 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம் இதன்படி திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனைப் பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டது

இந்த கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார் .

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 11445 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் நான்கு நபர்களுக்கும் ரூபாய் 6588 மதிப்பிலான கவர்னர் சேர் ஒரு நபருக்கும் தலா 1796 மதிப்பிலான ஊன்று கோல் நான்கு நபர்களுக்கும் என மொத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ரூபாய் 59552 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார் .

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை யின் திட்ட இயக்குனர் அபிதாஹனிப் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் காமாட்சி தனித்துணை ஆட்சியர் சாந்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஷியாம் சங்கர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உதவி இயக்குனர் முன்னாள் படை வீரர் நலன் கலைச்செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *