திருவாரூரில் ரூபாய் 3 கோடியே 87.29லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூபாய் 3 கோடியே 87 இலட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது இதனை இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
குறிப்பாக கடந்த 23.12.1976 இதே நாளில் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராகப் இருந்த போது த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திறப்பு விழாவை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஒன்றிய குழு தலைவர் தேவா குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்டு சட்டை பட்டு வேட்டி , பெண்கள் பட்டுப்புடவை அணிந்தும் ஊழியர்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் ஆடைகள் அறிந்து மானாட்டம் மயிலாட்டம், கரகாட்டம் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஆட்சியர் சாருஸ்ரீ ஒன்றிய குழு தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்