கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில்270 க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் குப்பை கிடங்கில் வீசப்பட்டிருப்பதால் பரபரப்பு………..
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் ஆறு முத்தம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் திருப்பூர் தாராபுரம் சாலை பகுதியிலுள்ள பெருச்சிபாளையம் பகுதியை சேர்ந்த270 க்கும் மேற்பட்ட குடும்பத்தாரின் ரேஷன் அட்டைகள்( ஸ்மார்ட் கார்டுகள்) அறிவொளி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அப்பகுதி மக்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் நியாய விலை கடையில் பணியாற்றும் நபர்களின் விடுப்பு கடிதங்கள், போன்றவைகளும் வீசப்பட்டுள்ளன. குப்பை கிடங்கில் வீசப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் காலாவதியானதா அல்லது பொது மக்களுக்கு புதிதாக வழங்குவதற்காக அச்சிடப்பட்டதா, மேலும் படிவங்களும் இருந்ததால் அரசு அதிகாரிகளின் அலட்சியமாக தூக்கி வீசப்பட்டதா போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது, இதனைத் தொடர்ந்து பல்லடம் வட்டாட்சியர் ஜீவா உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களின் அரசு அங்கீகாரமாக கருதப்படும் ரேஷன் கார்டுகள் குப்பைத்தொட்டியில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.