கோவையில் என்.எக்ஸ்.மைண்ட் வர்க்ஸ் (NX Mind Works) நிறுவனத்தின் 2025 காலண்டர் வெளியீட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது..
கோவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்.எக்ஸ்.மைண்ட் வர்க்ஸ் (NX Mind Works) நிறுவனம் பிரிண்டிங் மற்றும் விளம்பர துறையில் கடந்த இருபது ஆண்டுகளாக புதிய உத்திகளை செயல்படுத்தி கார்பரேட் வர்த்தக நிறுவனங்களிடையே பெரும் வரவேற்பை பெற்று செயல்பட்டு வருகிறது..
ஒவ்வொரு ஆண்டும் புதிய பரிணாமத்தில் காலண்டர்களை வெளியட்டு வரும் என்.எக்ஸ்.அதன் படி 2025 ஆம் ஆண்டிற்கான காலண்டர்களை வெளியீடு செய்துள்ளது.
சிம்பள் ஆஃப் கோயமுத்தூர்ஸ் எக்சலன்ஸ் (Symbol Of Coimbatore’s Excellence) என உருவாக்கி உள்ள
இதற்கான வெளியீட்டு விழா வடகோவை பகுதியில் உள்ள சம்மிட் (Summit) அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.
என்.எக்ஸ்.மைண்ட் வர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் குமார் மற்றும் நிர்வாக இயக்குனர் ரீனா கோத்தாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் திருமதி புஷ்பா கோத்தாரி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் சந்தோஷ் ராதாகிருஷ்ணன், அபுதாகீர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய காலண்டர்களை வெளியிட்டனர்.
முன்னதாக புதிய 2025 காலண்டரின் சிறப்பு குறித்து தீபக் குமார் பேசுகையில்,
கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு துறை சார்ந்த முன்னனி நிறுவனங்களின் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாகவும்,இந்த காலண்டர் வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள தகவல்களை அளிக்கும் விதமாக தயார் செய்துள்ளதாக தெரிவித்தார்..