தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது.
அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஓ.பி.எஸ் அணி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கற்பூர தீபாராதனை காண்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு ஏராளமான பொதுமக்களுக்கும்,கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானமாக காலை உணவு இட்லி பொங்கல் வடை கேசரி வழங்கினர்.
சுடச் சுட ஆவி பறக்க ஓ.பி.எஸ் அணி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அணியினர் வழங்கிய காலை உணவை பொதுமக்கள் ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சோம மங்கலம் ரமேஷ், சகுந்தலா கோபால், பொருளாளர் வஜ்ரவேலு, ஒன்றிய கழக செயலாளர்கள் முனிரத்தினம், கோவிந்தராஜ்,, மாகறல் சசி, வாலாஜாபாத் பேரூராட்சி ஆர்.ஜெயகாந்தன், பழனி, கழக பொறுப்பாளர்கள் யோகானந்தம் மாலிக் பாஷா படப்பை முரளி உத்திரமேரூர் பேரூராட்சி வழக்கறிஞர் குணசேகரன் , பூக்கடை ஜகா உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.