கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 37வது நினைவு தினத்தை முன்னிட்டுஎம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக ஊர்வலமாக வந்த அதிமுகவினர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் எம்ஜிஆரின் கருத்துக்களை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பி ஆர் ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ கே செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர்,நகரச் செயலாளர் வான்மதி சேட் ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மாவட்ட கவுன்சிலர் P.T. கந்தசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டனர்.