10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு, தர மறுக்கும் திமுக அரசை கண்டித்து, விருதாச்சலத்தில் பாமக சார்பில், மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில், விருத்தாச்சலம் பாலக்கரை ரவுண்டானாவில், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீட்டை தரமறுக்கும், திமுக அரசை கண்டித்து மாபெரும் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற்றது.
இப் போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மருத்துவர். கோவிந்தசாமி, மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர். தமிழரசி, மாநில இளைஞரணி செயலாளர் இ.கே சுரேஷ், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேல் உட்பட மாநில, மாவட்ட, நகர ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் வன்னியர்களை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்தும், மருத்துவர் அய்யா மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் போராட்டங்கள் குறித்தும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க கோரியும், அவ்வாறு தவறும் பட்சத்தில் மாபெரும் போராட்ட களத்தை, தமிழக அரசு சந்திக்க நேரிடும் என கண்டன உரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட நகர ஒன்றிய, நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.