கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…..
மாணவ மாணவிகள் நடனம் ஆடி,கேக் வெட்டிக் கொண்டாடினர்….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாணவ மாணவிகள் பாடல்கள் பாடியும், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஜோதி கலியமூர்த்தி, கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ், எழிலரசி, இலக்கியா, ரூபிலா ,முருகமணி மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை கொண்டாடினர்.