தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை
துணை ஆசிரியர் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
செல் 9994189962
புதுச்சேரி தந்தை பெரியார் 51–வது நினைவு நாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக–வினர் மரியாதை !

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51–வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி மாநில திமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. டி. சரவணன், துணை அமைப்பாளர் அ. தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஜே.வி.எஸ். ஆறுமுகம், ப. காந்தி, டி. அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி. கோபால், வே. கார்த்திகேயன், ப. செல்வநாதன், பெ. வேலவன், மு. பிரபாகரன், டி. செந்தில்வேலன், ப. இளம்பரிதி, எஸ். அமுதாகுமார், எஸ். நர்கீஸ், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், செ. நடராஜன், எம்.ஆர். திராவிடமணி, ஜி.பி. சவுரிராஜன், எல். மணிகண்டன், து. சக்திவேல், ர. சிவக்குமார், ரா. ஆறுமுகம், ப. வடிவேல், வெ. சக்திவேல், சே. ராதாகிருஷ்ணன், அணிகளின் அமைப்பாளர்கள் நெசவாளர் அணி ந. செந்தில்முருகன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மகளிர் தொண்டர் அணி சுமதி, ஆதிதிராவிடர் நலக்குழு சி. ஆறுமுகம், வர்த்தகர் அணி சு. ரமணன், தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், மருத்துவர் அணி லூ. ஆனந்த் ஆரோக்கியராஜ், சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு அ. முகம்மது ஹாலிது, வழக்கறிஞர் அணி ச. பரிமளம், தொமுச பேரவை சூ.அண்ணா அடைக்கலம், அணித் தலைவர்கள் ஆதிதிராவிட நலக்குழு மு. பழனிசாமி, மீனவர் அணி பா. தில்லையப்பன் (எ) ரமேஷ், பொறியாளர் அணி எஸ்.பி. பூபாலன், துணைத் தலைவர்கள் வர்த்தகர் அணி இரா. குரு (எ) சண்முகசுந்தரம், வழக்கறிஞர் அணி தாமோதரன், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஜே.ஆர். ராஜேஷ் (எ) சேவியர் ராஜேஷ், துணை அமைப்பாளர்கள் இளைஞர் அணி மு. உத்தமன், மகளிர் அணி ஏ. கல்யாணி, ஆதிதிராவிட நலக்குழு து. அன்பழகன், அ. சக்திவேல், சி. திருநாவுக்கரசு, அ. காளி, சு. கலியமூர்த்தி, க. தெய்வேந்திரன், ந. ஆறுமுகம், ஏ. கமலக்கண்ணன், சக்திவேல், பா. அய்யனார், தகவல் தொழில்நுட்ப அணி பாலபாரதி, கழக மூத்த முன்னோடிகள் வேலன், பலராமன், சபரிநாதன், மிலிட்டரி முருகன், சசிகுமார் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு தந்தை பெரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.