தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலின பாகுபாடு வன் முறைக்கு எதிரான விழிப்பு ணர்வு பிராச்சரக் மற்றும் மாபெரும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். வி .ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் குழந்தை திருமணம் போதைப்பொருள் பயன்பாடு மது ஒழிப்பு குடிப்பதைத் தடுத்தல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் ஆகிய முக்கிய தலைப்புகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
இதை யடுத்து பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்து முதல் நபராக கையெழுத்திட்டார் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ரங்கோலி கோலம் மிகச் சிறப்பாக போடப்பட்டிருந்தது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி சந்தியா உதவி திட்ட அலுவலர் மகளிர் திட்டம் அறிவழகன் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்