வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு துறையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் செல்லதுரை முன்னிலையில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ் குமார் தலைமையில் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி சுமார் 500 பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார் மற்றும் துறையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன்,முசிறி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ், முசிறி மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன், துறையூர் கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் முருகேசன், பொருளாளர் கிருஷ்ணசாமி,பிரதிநிதிகள் மாமுண்டி, பிரபாகரன்,துறையூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி,ஒன்றிய துணைச் செயலாளர் தாமரைச்செல்வன், குணசேகரன்,துறையூர் நகர பொருளாளர் முத்துக்குமார், கண்ணனூர் கிளைக் கழக செயலாளர்கள் கரிகாலன்,செல்வம், முத்தியம்பாளையம் ஊராட்சி துணை செயலாளர் மனோகரன், புளியம்பட்டி கிளைச் செயலாளர் செந்தில், கீழ குன்னுப்பட்டி அண்ணா நகர் கிளைச் செயலாளர் வினோத் குமார் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் செல்வம் ,சேட்டு பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி சிறப்பித்தனர்.