வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம்
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரை இழிவு படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் துறையூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் ச. மணிவண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழகம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,
இந்திய கம்யூனிஸ்ட்,காங்கிரஸ் கட்சி,தமிழ் புலிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரளுமன்ற கூட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சொல்வதை விட கடவுளின் பெயரை 100 முறை சொன்னால் புண்ணியம் கிடைக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.
இதில் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் ஜெ. தினேஷ் பாபு,நகர திராவிடர் தலைவர் க. ராஜா,மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் செ.செந்தில் குமார், மாவட்ட ப. க. அமைப்பாளர் மு. தினேஷ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆனந்த், செல்வம்,தமிழ் புலிகள் ராஜா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.