தே.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை டைம்ஸ் ஆப் தமிழ்நாடு துணை ஆசிரியர்

அரசியல் தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர் வரை.
முத்தியால்பேட்டை தொகுதியையே திரும்பி பார்க்க வைத்த திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன்

2000 பேருக்கு ரெயின் கோட், தள்ளுவண்டி, தட்டு வண்டி, தையல் மிஷின், மூக்கு கண்ணாடி, சலவை பெட்டி, பட்டு புடவை, வெல்டிங் கட்டர் மெஷின்என வழங்கி அசத்தல் மூக்கு மேல விரலை வைத்த மாற்றுக் கட்சியினர்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் மிக மற்றும் நூலகம் முத்தியால்பேட்டை தொகுதி திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு அரசின் துணை முதல்வர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 47–வது பிறந்த நாளை முன்னிட்டு, முத்தியால்பேட்டை தொகுதி திமுக சார்பில், 50 நபர்களுக்கு நிழற்குடை, 50 பேருக்கு ரெயின்கோட், 13 பேருக்கு தள்ளுவண்டி, ஒரு நபருக்கு தட்டு வண்டி, 20 பெண்களுக்கு தையன் இயந்திரம், 2 பேருக்கு பித்தளை சலவைப் பெட்டி, 4 தொழிலாளர்களுக்கு இரும்புக்கம்பி கட்டிங் இயந்திரம், 15 முதியவர்களுக்கு மூக்கு கண்ணாடி, 400 பெண்களுக்கு பட்டுப்புடவை உள்ளிட்ட 600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா முத்தியால்பேட்டை காந்தி வீதியில் நடைபெற்றது.
பொதுக்குழு உறுப்பினர் மு. பிரபாகரன் மற்றும் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் மு. உத்தமன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில், புதுச்சேரி மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து, ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.
இந்த விழாவில், மாநில கழக பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் எல்.சம்பத், எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர்கள் ஏ.கே.குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம்.பி. லோகையன், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள், கோபால், எஸ். அமுதாகுமார், நர்கீஸ், தொகுதி செயலாளர்கள், சக்திவேல், வ. சீத்தாராமன், தியாகராஜன்,. சிவக்குமார், ஆறுமுகம், வடிவேல், பி.சா. இளஞ்செழியபாண்டியன், சே. ராதாகிருஷ்ணன், ம. கலைவாணன், சத்தியவேல், அணிகளின் அமைப்பாளர்கள் மாணவர் அணி எஸ்.பி. மணிமாறன், மகளிர் அணி காயத்ரி ஸ்ரீகாந்த், மீனவர் அணி ந. கோதண்டபாணி, தகவல் தொழில்நுட்ப அணி தாமோ. தமிழசரன், கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவை கி. சங்கர் (எ) சிவசங்கரன், நெசவாளர் அணி செந்தில்முருகன், மருத்துவர் அணி ஆனந்த் ஆரோக்கியராஜ், வர்த்தகர் அணித் தலைவர் செல்வா, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் சிவதாசன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரெமி எட்வின், தாமரைக்கண்ணன், அகிலன் கிருபா அன்பில். அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி துணை அமைப்பாளர் லோகநாதன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயமூர்த்தி, சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ஷேக், அயலக அணி துணை அமைப்பாளர் தென்றல், முன்னாள் கவுன்சிலர் கணேசன், தொகுதி துணை செயலாளர் செல்வம், மாநில பிரதிநிதி சிவகுமார் செயற்குழு உறுப்பினர்கள் மனோகர், சிவலிங்கம், கலியபெருமாள், முன்னாள் மீனவர் அணி துணை அமைப்பாளர் முனுசாமி கிளைக் கழகச் செயலாளர்கள் வேலு ரெமோ நாராயணமூர்த்தி மோகனசுந்தரம் ஏகாம்பரம் காந்தி மணிகண்டன் தண்டபாணி மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.