இர. தந்தைபிரியன் இணை ஆசிரியர்
புதுச்சேரியில் மண்ணின் மணம் ஓவியர் ஜெ. ஏழுமலை அவர்களின் நீர் வண்ண ஓவிய கண்காட்சி நடைபெற்றது

புதுவை வண்ண அருவி ஓவியக் கூடத்தில் நடைபெற்ற மண்ணின் மணம் ஓவியக் கண்காட்சியில் மூத்த ஓவியக் கலைஞர் மணியம் செல்வம் முன்னிலையில் மூத்த ஓவியக் கலைஞர் திரைப்படக் கலைஞர் பேச்சாளர் சிவகுமார் ஓவிய கண்காட்சியை தனது பொற்கரங்களால் திறந்து வைத்து வாழ்த்துகளை வழங்கினார்
மேலும் நிகழ்ச்சியில் சுந்தரன் அனைவரையும் வரவேற்றார் ஓவியர் ஏழுமலை அனைவருக்கும் நன்றி நல்கினார் நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள் கலைமாமணி லட்சுமி நாராயணன் (தலைவர் புதினம்) வண்ண அருவி ஓவியக்கூடம் நிர்வாகிகள் ராஜேஷ் பாரதியார் கலைக்கூட முன்னாள் ஓவிய பேராசிரியர் ராஜராஜன் ஓவிய ஆசிரியர் அன்பழகன் மேலும் நிகழ்ச்சியில் ஓவியர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்