பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல்:9715328420
பராமரிப்பு பணியின்போது திடீரென பய்ந்த மின்சாரம்: மின்வாரிய தற்காலிக தொழிலாளர் உடல் கருகி 80%சதவீத காயத்துடன் மீட்பு!…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின்கம்பத்தில் பீஸ் கேரியல் போடும்போது மேலே சென்று கொண்டிருந்த ஹச் டி உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து மின்சார தற்காலிக பணியாளர் உடல் முழுவதும் கருகி 80% சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டார்.
மூலனூர் அருகே உள்ள மூலக்கடை- ராமபட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளியங்கிரி, இவரது மனைவி மீனா, வெள்ளியங்கிரி மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று மதியம் ராமபட்டிணம் பகுதியில் மின்சாரம் தடைபட்டு உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெள்ளியங்கிரி அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரை ஆப் செய்து விட்டு மின்கம்பத்தின் மீது ஏறி பீஸ் கேரியல் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக தனது கையை மேலே உயர்த்திய போது மூன்று அடி தூரத்தில் சென்று கொண்டிருந்த ஹச் டி உயர் மின் அழுத்த கம்பியில் தனது கை பட்டது.
இதனால் உயர் மின்னழுத்த மின்சாரம் வெள்ளியங்கிரி உடல் முழுவதும் பரவியது. என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வெள்ளியங்கிரி அலறினார். அதற்குள் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து 80% சதவிதம் வெள்ளியங்கிரியின் உடல் முழுவதும் கருவியது. அதன் பிறகு தொழிலாளர் வெள்ளியங்கிரி கம்பத்தில் காயங்களுடன் தலைகீழாக தொங்கினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தீயணைப்பு நிலைய வீரர்கள் 35கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவ இடத்திற்கு செல்வதற்கு கால தாமதமாகும் எனவே நாங்கள் வருவதற்குள் வேறு வழி இருந்தால் அவரைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யுங்கள் என தெரிவித்திருந்தனர்.
தீயணைப்பு வண்டி கொளத்துப்பாளையம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது அதற்குள் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கம்பத்தில் ஏறி வெள்ளியங்கிரியின் உடலை மின்கம்பத்தில் இருந்து பிரித்தெடுத்து 108-ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வாழை இலையால் அவர் உடல் முழுவதும் சுற்றப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஊருக்கே உதவி செய்த வெள்ளியங்கிரி மின்சாரம் தாக்கி படுகாயங்களுடன் அம்மா என்னை காப்பாற்றுங்கள் ஐயா என்னை காப்பாற்றுங்கள் என கதறி அழுத நிலையில் நான் இனிமேல் உயிர் பிழைக்க மாட்டேன். என கதறிய காட்சிகள் பலரது கண்களில் கண்ணீரை வரவழைத்தது. இந்த சம்பவம் குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.