கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்ட பிரச்சாரம் ஒரு மதக் கலவரத்தை தூண்டக்கூடிய ஒரு பொய் பிரச்சாரம் என சிபிஐ விசாரணைக்கு தெரிவித்துள்ளதாக கும்பகோணத்தில் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி பேட்டி…….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், மற்றும் தோழர் கிட்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் மே 17 இயக்க செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், தமிழ் மண் தன்னுரிமை இயக்க தலைவர் ஜெயராமன், திராவிடர் கழக குடந்தை மாவட்ட கழக செயலாளர் துரைராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் புர்கான் அலி ஆகியோர் கலந்துகொண்டு கிட்டு என்ற லெனின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி சிறப்புரை ஆற்றினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது….
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையில் அடித்துக் கொண்டது ஒரு பொய் நாடகம் என்றும், மதவாதத்தை உருவாக்குகின்ற பிரச்சாரம் எனவும் சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியை இறக்குவதற்காக செருப்பை கழட்டி இருப்பது திமுக கட்சிக்காக அல்ல ஒருபோதும் தமிழகத்தில் பாஜக வராது என்பதற்கு அவர் செருப்பு கழட்டி உள்ளார் என பேட்டியளித்தார்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ரபீலா தேவி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த், விசிக மாவட்ட அமைப்பாளர் முத்தமிழ்ச்செல்வன், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.