தஞ்சையில் உலக நன்மைக்காக திருமுறை பாராயணம், மற்றும் சைவசமய செந்தமிழ் எழுச்சிப் பெருவிழா

தஞ்சாவூர் மாவட்டம் :தஞ்சாவூர் உலக நலன் வேண்டி திருமுறைப் பாராயணம், மற்றும் சைவசமய செந்தமிழ் எழுச்சிப் பெருவிழா முதல் நாளான கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது

இவ்விழாவில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.இன்று முதல் நாளான திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்பு பேரியக்கத்தின்
நிறுவனத்தலைவர் மற்றும் திருமுறை கலைக்களஞ்சியம்” “தெய்வத்தமிழிசை அறிஞர்” “சைவசமயப் புரட்சியாளர்” “முனைவர்” திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் தலைமை தாங்கினார்.சைவப் பெருவிழாவில், திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி 18,ஆவது ஆதீனம் குருமகா சந்நிதானம் “சீர்வளர்சீர்” சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்குகினார்கள்.

பாரதிய ஜனதா கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் ,தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர், இராம.சுந்தரவதனம் , தமிழ்நாடு சிவசேனா மாநில செயல்த் தலைவர்,பாவை.க.சசிகுமார்,ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்கள்.

விழாவில் ஒவ்வொரு கலைத்துறையில் அவரவர் சார்ந்த துறை களில் சிறப்பு விருதுகள், திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்புப் பேரியக்கத்தால், வேளாக்குறிச்சி ஆதீனம் 18, ஆவது குருமகா சன்னிதானம் அவர்களின் கரங்களால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, காலையில் “கலைமாமணி” திருத்தணி நா.சுவாமிநாதனின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும்,
திருமுறை கலைக்களஞ்சியம்” “சைவசமயப் புரட்சியாளர்” “முனைவர்” திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜ தேசிகரின் பட்டிமன்ற நடுவராக பங்கேற்று, காஞ்சிபுரம், திருஞான.கதிர்வேல் சுப்பிரமணியம் ஓதுவார், தஞ்சைப் பெருவுடையார் கோயில், மு.சிவநேசன் ஓதுவார் ஆகிய இருவரும் இருபெரு அணித்தலைவராகவும், கரந்தைத் தமிழ்ச் சங்க தமிழ் பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் பங்கு பெறும், சிறப்பு பட்டிமன்றமும், ,
சென்னை “சைவசித்தாந்தி” ர.பிரகாஷ் அவர்களின் சிறப்புரையும்,

மாலையில் திருமுறை கலைக்களஞ்சியம்” “திருமுறை புரட்சி வேந்தர்” திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் விழாவின் சிறப்புரையும், அண்ணாரது சிறப்பு திருமுறை இன்னிசையும், நடைபெற்றது

சிறந்த செந்தமிழ் அடிகளார்” திருவில்லிபுத்தூர் சிவ.வெ.மோகனசுந்தரம் அவர்களின் சொற்பொழிவும், இன்னும் சில தமிழ் அறிஞர்களின் உரையும் சிறப்பாக நடந்தது.

விழாவில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும், தங்குமிடம், காபி, தேநீர், மற்றும் அறுசுவையான உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.
செந்தமிழ் ஓதுவாமூர்த்திகளின் வாழ்த்துப் பாடலோடு முதல் நாள் நிறைவு பெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *