வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்
திருச்சி
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துணிச்சலாக சிறப்பாக பணியாற்றி வந்த எஸ் பி வருண் குமாரை திருச்சி சரக டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கி நேற்று முன்தினம் டிசம்பர் -29)தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
2011 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரிகளான வருண் குமார் அதிரடி நடவடிக்கைகளுக்கும், நேர்மைக்கும், துணிச்சலுக்குழ் பெயர் போனவர். இவருக்கு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு வழங்கியுள்ளது தமிழக அரசு. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், திருச்சி எஸ் பி வருண் குமாருக்கு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சக அதிகாரிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.