கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து திருவையாறில் தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் ஈடுப்பட்டனர்.
அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார்கைது…..

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்
திமுக ஆட்சியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் பாலியல் சீண்டல்களை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி திருவையாறு கடைவீதியில் தஞ்சை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ரெத்தினசாமி தலைமையில் 200க்கும் மேற்பட்டஅதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் இளங்கோவன் , அம்மா பேரவை செயலாளர் ஐயப்பன், நிர்வாகிகள் சூரிய பிரகாஷ் மற்றும் கழக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் .
இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் கைது செய்தனர்.