எபி பிரபாகரன். பெரம்பலூர். செய்தியாளர்.
பெரம்பலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கைகளத்தூர்
உதவி காவல் ஆய்வாளர் எஸ்.ஆர்.குமார், ஒரு தலை பட்சமாகவும் மற்றும் அடாவடியான நடவடிக்கைகளை கண்டித்து வேப்பந்தட்டை, பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றி வைக்கப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், வேப்பந்த ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார் செல்லதுரை, ஆறுமுகம், திருநாவுக்கரசு,
விஜய ராணி,தர்மலிங்கம்,கலியன்,தங்கராசு,முருகன்,சிலம்பரசன்,
சந்திரசேகர், தங்கமணி,ஜெயா, சௌ.ஜெயலட்சுமி மற்றும்
பரமேஸ்வரன் ஆகியவர்கள் முன்னிலை வகித்தானர்.
ஞானசேகரன்(மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்
மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்)
வெ.ஜெயராமன் ஆகியேர் கண்டன உரை ஆற்றினார். கடந்த 08 ம் தேதி கொடுத்த புகார் மனுவை ஒரு தலை பட்சமாக விசாரணை செய்ததாக காவல் உதவி ஆய்வாளர் எஸ்.ஆர்.குமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலியபெருமாள்,
கருப்பன்,தனராசு,,தங்கவேல் அமுதா,பழனிச்சாமி,
வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.