உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்தார்.
தியாகராஜர் திருக்கோவிலுக்கு வருகை தந்த இசைஞானி இளையராஜாவை ஆன்மீக பக்தர்கள் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வரவேற்றனர்.
தொடர்ந்து திருவாரூர் தியாகராஜா சுவாமி திருக்கோவிலின் மைய மண்டபத்தில் உள்ள தியாகராஜ சுவாமிக்கு நடைபெறும் சாயரட்ச்சை பூஜையை நேரில் கண்டு தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கமலாம்பாள் சன்னதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட இளையராஜா இதனையடுத்து தில்லை நடராஜரை தரிசனம் செய்வதற்காக சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார்.